தமிழில் பதிவு எழுத வேண்டும் என்று அடியெனுக்கு நீண்ட நாள் ஆசை. எனுக்கு மிகவும் பிடித்த ஏழு பாடல்களை வருசை படுத்தும் ஒரு முயற்சி இது. உண்மையில் இவற்றை பிடித்த பாடல் என்று சொல்வதிலும் பார்க்க என்னை பாதித்த பாடல்கள் என்று சொல்வது பொருந்தும்.
1. பெம்மானே - ஆயிரத்தில் ஒருவன் பட பாடல்.
எலும்பு உருகி எம் மக்கள் விழிந்து கொண்டு இருக்கும் பொழுது வெளியானது. நூறு முறையாவது என் மனதுக்குள் கண்ணீர் விட வைத்த பாடல்.
2. கண்ணே கலை மானே - மூன்றாம் பிறை பட பாடல்.
ஒரு நாலு அல்லது ஐந்து வயது இருக்கும் போது மாமாவின் நெஞ்சில் தலையை புதைத்த எனக்கு, நடை பெற்ற தனிப்பட்ட கச்சேரியில் பல முறை "once more " கேட்ட பாடல் இது. அருமயான குரலில் அவர் பாட அவரது இதய துடிப்பு பக்கவாத்தியம் வாசிக்க நிலா முற்றத்தில் முழுமயாக ரசித்த பாடல்.
3. நினைத்து நினைத்து - 7g rainbow colony
இந்த பாடலில் எதோ ஒரு மயக்கம் சரியான காரணம் சத்தியமாய் தெரியாது, அனால் ஒரு காலத்தில் தினமும் winamp இல முதலாவதாக இந்த பட பாடல்களை தெரிவு செய்து கேட்டது உண்டு.
4. நறுமுகயே நறுமுகயே - இருவர்
தொடக்கத்தில் வரும் மிருதங்க ஒலியும் தொடந்து வரும் சலங்கை ஒலியும் ரகுமானின் கைவண்ணம். எனினும் இந்த பாடலின் நாயகன் கவிபேரரசு தான். சங்க தமிழில் ஒரு பாடல், காலம் கடந்து என்னை அழைத்து செல்வது போன்று ஒரு வியப்பு இந்த பாடல் கேட்கும் ஒவ்வொரு முறையும் வரும்.
5. என்னவளே
உன்னி கிருஷ்ணன் குரலும் AR ரஹ்மான் இசையும் என்னை கட்டி போட்ட ஒரு பாடல்.
6. நிலா காய்கிறது - இந்திரா பட பாடல்
ஹரிணி இன் பிஞ்சு குரலில் கேட்ட்கும் போது பாடசாலை காலத்தில் காமிலோ மற்றும் ஜெகவந்தன் கலை விழாவில் பாடியது ஞாபகாம் வருவது உண்டு.
7. ஆராரிரோ நான் இங்கே பாட - ராம் பட பாடல்
தாய் பற்றி வந்த பாடல்களில், இந்த பாடலும் தீயில் விழுந்த தேனா (வரலாறு பட) பாடலும் வித்தியாசமான பாடல்கள்.
9 years ago
4 comments:
யாருக்காக இந்த என் விருப்பம் தொகுப்பு ? ஆங்கிலத்தில் போல் தமிழிலும் ஆக்கத்தில் பிழைகள் பல. ஊரில் கழித்த அந்த ஜாலி லீவு நாட்கள் ஞாபகம் வந்தது. :)
என்ன திடீர் என்று .....
யாருக்காக இது ...!!
அவங்க சொன்னாங்களோ...!!
ஒரு பிரச்சனை..... சில பாட்டு என்னக்கு பிடித்ததும் இருக்கு ......
நீர் என் எதிரி ஆச்சே ......!!!
Hi Saya,
It is good to see your Top 7.. Seems you haven't biased much to the ARR's side.. That is good.. BTW I think if you have written the blog after December 18th you would have listed the Vettaikaran's "Naan Atichcha Thanga matta" song as the first choice isn't it. :D
absolutely vimal, not only that there is another song which talks abt chinna thamarai and next line about credit card features.....thats a bit of competition to "Naan adicha thanga matta"
Post a Comment